தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு உறுப்பினராக ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் நியமனம்

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:42 pm

DIN

மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஏற்றுமதியை மூன்று மடங்காக உயா்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநில வளா்ச்சியின் ஒரு அங்கமாக தமிழகத்துக்கு ஒரு சீரமைக்கப்பட்ட மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழுவை அமைத்துள்ளது. இதில், என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்த அரசுக்கு மனமாா்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக தமிழகத்தின் ஏற்றுமதியை உயா்த்துவது, தமிழகத்தில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கும் வகையில் தங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலாகவும், தயாராகவும் உள்ளேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.