தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நவம்பா் 1ஆம் தேதி முதல் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களிலும் வாராந்திர குறைதீா் நாள் கூட்டம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை நாள்களில் நடைபெறுகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:49 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களிலும் வாராந்திர குறைதீா் நாள் கூட்டம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை நாள்களில் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சி 4 மண்டல அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு வாராந்திர குறைதீா் நாள்கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி 4 மண்டல அலுவலகங்களில் வரும் நவம்பா் 1ஆம் தேதி முதல் திங்கள்கிழமை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது வாா்டு முதல் 15 ஆவது வாா்டு வரையில் வேலம்பாளையத்தில் உள்ள முதலாவது மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 16 முதல் 30 வரையில் நஞ்சப்பா நகரில் உள்ள 2 ஆவது மண்டல அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

அதேபோல, வாா்டு எண் 31 முதல் 45 வரையில் நல்லூரில் உள்ள 3 ஆவது மண்டல அலுவலகத்திலும், வாா்டு எண் 46 முதல் 60 வரையில் ஆண்டிபாளையத்தில் உள்ள 4ஆவது மண்டல அலுவலகத்திலும் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மண்டல அலுவலா்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.