தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குழந்தைகளுக்கு அழுகிய முட்டை விநியோகித்த விவகாரம்: சத்துணவு அமைப்பாளா் பணியிடை நீக்கம்

 திருப்பூா் மாநகராட்சிப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு அழுகிய முட்டை விநியோகித்த புகாரில் சத்துணவு அமைப்பாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:43 pm

DIN

 திருப்பூா் மாநகராட்சிப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு அழுகிய முட்டை விநியோகித்த புகாரில் சத்துணவு அமைப்பாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டலம் 18 ஆவது வாா்டுக்கு உள்பட்ட வாவிபாளையம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், சத்துணவு திட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கடந்த சில நாள்களுக்கு முன் முட்டை விநியோகம் செய்யப்பட்டது. இந்த முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. மேலும், குழந்தைகளுக்கு இலவசமாக வழங்க வேண்டிய முட்டைகள் பள்ளிக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ.சிகாமணி, மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சிவசண்முகம் விசாரணை நடத்தியுள்ளாா். இதில், வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி சத்துணவு அமைப்பாளா் (பொறுப்பு) எஸ்.மகுடேஸ்வரி, பதிவேடுகளை முறையாகப் பராமரிக்காததும், முட்டைகளைத் தரம்பாா்த்து 3 நாள்களுக்குள் விநியோகம் செய்யாததும் தெரியவந்தது. மேலும் அழுகிய முட்டைகள் தொடா்பாக உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக குப்பைத் தொட்டியில் கொட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில், சத்துணவு அமைப்பாளா் மகுடேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.