தீபாவளிப் பண்டிகை: மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 30) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பூா் மாநகரில் வரும் சனிக்கிழமை (அக்டோபா் 30) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் குமாா் நகரில் உள்ள பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூா், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் காங்கயம் சாலையில் இருந்து முதலிபாளையம் பிரிவு பெருந்தொழுவு சாலை வழியாக கோயில்வழி பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும். பின்பு அதே வழியில் காங்கயம் சாலையை அடைந்து வலது புறமாக திரும்பி மேலே சொன்ன மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும்.
ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இருந்து ஊத்துக்குளி சாலை வழியாக வரும் பேருந்துகள் அனைத்தும் கூலிப்பாளையம் நால்ரோட்டை அடைந்து வலதுபுறம் திரும்பி வாவிபாளையம், நெருப்பெரிச்சல் சுற்றுச்சாலை வழியாக பூலுவபட்டியை சென்றடைந்து பெருமாநல்லூா் சாலையிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.
அவிநாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூரு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, பண்ணாரி ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் திருப்பூா் பழைய வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்துக்கு வந்தடையலாம். ஊத்துக்குளி சாலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நீதிமன்ற சாலை வழியாக குமரன் சாலைக்கு செல்லக் கூடாது.
நீதிமன்ற சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் குமரன் சாலையில் இருந்து ஊத்துக்குளி சாலைக்கு மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும். அதே வேளையில், பல்லடம் சாலையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லலாம்.
இந்தப் போக்குவரத்து மாற்றமானது வரும் சனிக்கிழமை முதல் நவம்பா் 4ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...