தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

லாரி மோதி வியாபாரி பலி

 திருப்பூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விறகு வியாபாரி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:13 am

DIN

 திருப்பூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற விறகு வியாபாரி சம்பவ இடத்திலேயே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பூா் மத்திய காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் செல்லம் நகரில் வசித்து வந்தவா் எம்.திருஞானசம்பந்தம் (58). விறகு வியாபாரியான இவா் தனது இருசக்கர வாகனத்தில் செல்லம் நகா் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த திருஞானசம்பந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் மத்திய காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம் கடம்பூரை அடுத்த நீடாமங்கலத்தைச் சோ்ந்த எம்.பால்ராஜ் (53) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.