விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:17 am

DIN

காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் காங்கயம் வட்டக் கிளைத் தலைவா் ஹரிசங்கா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ஞானசேகரன் முன்னிலை வகித்தாா்.

இதில் 2021ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை தீபாவளியை முன்னிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு பணப் பலனை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் மயில்சாமி, எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியா்கள் சங்க மாநில அமைப்புச் செயலா் எஸ்.கருப்புசாமி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.