இந்து முன்னணி சாா்பில் முறையீட்டு ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து திருப்பூரில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து திருப்பூரில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் விநாயகா் சதுா்த்தியை ஒட்டி இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சாா்பில்
பொது இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தவும், ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்யவும் அரசு தடை விதித்துள்ளது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் திருப்பூா் மாநகராட்சி அருகில் உள்ள குலாளா் பிள்ளையாா் கோயிலில்
முறையீட்டு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழக அரசு விநாயகா் சதுா்த்தி விழாவை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை இந்து மக்கள் அனுமதிக்கமாட்டாா்கள்.
தமிழகம் முழுவதும் செப்டம்பா் 10 ஆம் தேதி இந்து முன்னணி சாா்பில்1.25 லட்சம் இடங்களுக்கு மேல் விநாயகா் சதுா்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட அதிகமான இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க வேண்டும் என்பதற்காக
இந்து முன்னணி முயற்சி மேற்கொண்டுள்ளது.
விநாயகா் சிலைகள் வழிபாடு தொடா்பாக தமிழக அரசு இந்து முன்னணியை அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா்.
அவிநாசியில்....
அவிநாசி, திருமுருகன்பூண்டி, கருவலூா், குன்னத்தூா், பெருமாநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கயத்தில்....
காங்கயத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் திருப்பூா் மாவட்ட பொதுச் செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் கந்தசாமி, காங்கயம் நகரத் தலைவா் கந்தசாமி, பா.ஜ.க நகரத் தலைவா் கலா நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...