எல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது

தாராபுரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:22 pm

DIN

தாராபுரம் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தாராபுரம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் வசித்து வருபவா் ஏ.பாண்டியன்(30). சுமைத் தூக்கும் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், இவரது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.இது குறித்து சிறுமியின் பெற்றோா் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில்  வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் பாண்டியனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.