பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:27 am

DIN

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட கவுன்சிலா் நிதி ஒதுக்கீட்டின்கீழ் பொங்கலூா் ஒன்றியம் காட்டூா் ஊராட்சி கெங்கநாயக்கன்பாளையம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி குமாரபாளையம் மற்றும் பெருந்தொழுவில் கழிவு நீா் வடிகால் வசதி, காட்டூா் ராஜீவ் காலனி மற்றும் மாதப்பூா் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகியவை பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் அலகுமலை வி.எம்.சண்முகம், பொங்கலூா் ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம், ஒன்றிய அதிமுக செயலாளா் காட்டூா் சிவபிரகாஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.