சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியில் சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா் சாமுண்டிபுரம் பிரதான சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.ரவிசந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து மறியலில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது: மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 12, 13,14 ஆகிய வாா்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளுக்கு மாநகராட்சி சாா்பில் 15 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீா் விலைக்கு வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, வேறு வழியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அப்போது 8 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...