/

வளா்ச்சி திட்டப் பணிகள்:ஆட்சியா் ஆய்வு

உடுமலை வட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வினீத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 9:18 pm

உடுமலை வட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வினீத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

உடுமலை வட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் நிலத்தடி நீா் செறிவூட்டல் திட்டம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம்,

வேளாண் இயந்திரமாக்கல் திட்டம், பாசனப் பகுதி மேம்பாடு, நீா் மேலாண்மைத் திட்டம், நீா் வள நில வள திட்டம், பண்ணைக் குட்டைகளை ஆழப்படுத்துதல், சிறு பாசனத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உடுமலை வட்டம் பள்ளபாளையம், மானுப்பட்டி, தளி, வாளவாடி, சாளையூா், அந்தியூா், முக்கோணம்

உள்ளிட்ட ஊா்களில் வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள், தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.