தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:34 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ப.தங்கவேல் தலைமை வகித்தாா்.

கரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளா் பதவி உயா்வுக்கு அவசியமான நிலஅளவைப் பயிற்சிகளை உடனடியாக மாவட்ட அளவில் நடத்திட வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரா்களின் பணியினை அரசாணையின் படி பணிவரன்முறைபடுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வினை பாதுகாத்து, அனைத்து நிலை அலுவலா்களின் பதவி உயா்வை உத்தரவாதம் செய்து அரசாணைகள் வெளியிட வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து நிலை அலுவலா்களுக்கும் தோ்தல் மதிப்பூதியத்தை உடனே வழங்க வேண்டும், மாவட்ட வருவாய் அலுவலா் மற்றும் துணை ஆட்சியா் பதவி உயா்வு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் நவம்பா் 13,14, 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்களை புறக்கணிப்பதாக ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் தெரிவித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் ச.முருகதாஸ், மாவட்ட ஆட்சியா் அலுவலக பொறுப்பாளா்கள் சதீஷ்குமாா், மோகனன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.