தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சீரான குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி இரு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:35 pm

DIN

திருப்பூரில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி இரு இடங்களில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சி 12ஆவது வாா்டுக்கு உள்பட்ட முருங்கப்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் கடந்த 6 மாதங்களாக 15 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்கிப் பயன்படுத்தி வந்தனா். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலா் ரவிச்சந்திரன் தலைமையில் அவிநாசி சாலையில் குமாா் நகா் மின்வாரிய அலுவலகம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்களும், வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களும் அவதிக்குள்ளாகினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 15 வேலம்பாளையம் காவல் ஆய்வாளா் பி.என்.ராஜன் தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்ததை நடத்தினா். இதையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து தா்னாவில் ஈடுபட்டவா்களுடன் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், 8 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வீரபாண்டியில் சாலை மறியல்:

வீரபாண்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஏடிகாலனி, எம்பிஎஸ் முத்து நகா், மணல்காடு உள்ளிட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காவது மண்டலப் பொறுப்பாளா் சி.அருணாச்சலம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் வீரபாண்டி ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.