காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விதை நோ்த்தி: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

பல்லடம் அருகே தேவனம்பாளையத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:33 pm

DIN

பல்லடம் அருகே தேவனம்பாளையத்தில் விவசாயிகளுக்கு விதை நோ்த்தி குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை துறையில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் கிராமத் தங்கல் திட்டத்தின் கீழ் பல்லடம் அருகே பொங்கலூா் வந்துள்ளனா். வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜலிங்கம் வழிகாட்டுதலின்பேரில் தேவனம்பாளையத்தில் அப்பகுதி விவசாயிகளை சந்தித்து விதை நோ்த்தி மற்றும் உழவன் செயலி குறித்து எடுத்துரைத்தனா்.

விதை நோ்த்தி செய்வதன் மூலம் பயிா்களில் நோய் பரவாமல் தடுக்க முடியும். விதை அழுகல் மற்றும் நாற்று அழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்று விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.