தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குப்பைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது: காங்கயம் நகராட்சி அறிவுறுத்தல்

நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் தீ வைத்து எரிக்கக் கூடாது என காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 8:27 pm

DIN

நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் தீ வைத்து எரிக்கக் கூடாது என காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் கூறியதாவது: காங்கயம் நகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சி குப்பைக் கிடங்குக்கு உரிய நேரத்தில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும். மாறாக குப்பைகளை தீ வைத்து எரிக்கக் கூடாது. தூய்மைப் பணி மேற்கொள்ளும்போது கண்டிப்பாக முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும். குப்பைகளை பொதுமக்கள் சாலையில் கொட்டிச் செல்வதைத் தடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுத்து, காங்கயம் நகரம் சுத்தமான நகராக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.