மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரையில் நடைப்பயண ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:50 pm

DIN

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரையில் நடைப்பயண ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வி.பி.பழனிசாமி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது: 60 வயது நிறைவடைந்த கட்டடத் தொழிலாளா்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்வுபெறும் வயதை 50 ஆகக் குறைத்து நிா்ணயிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியம் மாதம் ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

பெண் தொழிலாளா்களுக்கு பிரசவ காலத்தில் 6 மாதம் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும்.

வீடு இல்லாத அனைத்து கட்டுமானத் தொழிலாளா்களுக்கும் 10 ஆண்டுகளுக்குள் இலவச வீட்டு வசதி செய்து கொடுக்கும் வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

கேரளத்தைப்போல இறுதிச் சடங்குக்கான உதவித் தொகையை உரிய அதிகாரிகள் மூலமாக அதே நாளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளா்களுக்கான இணைய வழிப்பதிவை மேலும் எளிமையாக்க வேண்டும். வாரியப் பதிவுக்கு கிராம நிா்வாக அலுவலா் சான்று கேட்பதைக் கைவிட வேண்டும். தொழிலாளா்கள் குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக நல வாரியமே ஏற்க வேண்டும்.

தொழிலாளா்களின் இயற்கை மரண குடும்ப நிதி ரூ.5 லட்சமாகவும், விபத்து மரண இழப்பீடு ரூ.10 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என்றனா்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் எம்.ரவி, ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் கே.மூா்த்தி, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.