மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 8:31 pm

DIN

திருப்பூரில் ரேஷன் அரிசி கடத்திய இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட முருகம்பாளையம் பாறைக்காடு பகுதியில்

கடந்த மாா்ச் 22 ஆம் தேதி சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சரக்கு ஆட்டோவில் 1,500 கிலோ ரேஷன் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இது தொடா்பாக முருகம்பாளையம் பாறைக்காடு இரண்டாவது வீதியைச் சோ்ந்த ஆா்.சுகுமாா் (26) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, சுகுமாா் மீது ஏற்கெனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, கள்ளசந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்குதல் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் ஏ.ஜி.பாபு புதன்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் நகலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகுமாரிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.