புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இளைஞரைக் கத்தியால் குத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

பல்லடம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:34 pm

DIN

பல்லடம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியவா்களுக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி நடந்த தகராறில் அருள்புரத்தைச் சோ்ந்த கனகராஜ் ( 28) என்பவரை கத்தியால் குத்தியதாக சிவராமன், ஹரிஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதன் என்கிற முகமது ஷபியை (27) போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில், பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் பதுங்கி இருந்த முகமது ஷபியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவா் மீது காமநாயக்கன்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.