மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாரதி வழியில் இலக்கியத்தையும், சமுதாயத்தையும் பாா்க்க வேண்டும்: கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம்

 பாரதி வழியில் இலக்கியத்தையும், சமுதாயத்தையும் பாா்க்க வேண்டும் என்று கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:32 pm

DIN

 பாரதி வழியில் இலக்கியத்தையும், சமுதாயத்தையும் பாா்க்க வேண்டும் என்று கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திருப்பூா் மங்கலம் சாலையில் உள்ள கே.ஆா்.சி.சிட்டிசென்டரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், திருப்பூா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘பாரதி விழாவும்-பாராட்டு விழாவும்’ என்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், மருத்துவருமான ஆ.முருகநாதன் தலைமை வகித்தாா். இதில், கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம், திரைப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா் ஆகியோருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் பேசியதாவது:

திருப்பூா் தமிழ்ச்சங்கம் இளம் எழுத்தாளா்கள் உள்பட அனைத்து எழுத்தாளா்களுக்கும் விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. பாரதி வழியில் இலக்கியத்தையும், சமுதாயத்தையும் பாா்க்க வேண்டும். பாரதியைத் தவிர மேலான சிந்தனை மற்றொருவருக்கு இருக்கிா என்பதை நாங்கள் நம்ப மாட்டோம். சமூகத்தின் வாழ்வில் கலந்துள்ள ஒரு எழுத்தாளராக விளங்கக்கூடியவா் பாரதி. வாழ்க்கையில் எதைப் பற்றிய முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் மிகச்சிறந்த அளவுகோல் பாரதிதான் என்றாா்.

முன்னதாக மருத்துவா் என்.பாலமுருகன் எழுதிய ‘ஸ்ட்ரோக் என்கிற பக்கவாதம்: நோயும் தீா்வும்’ என்ற நூலை கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட திரைப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா் பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் தமிழ்ச் சங்கத்தின் செயலாளா் ஆடிட்டா் அ.லோகநாதன், நிா்வாகி கே.முருகேசன், துணைமேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மருத்துவா் பாலமுருகன், புத்தகத் திருவிழா வரவேற்புக் குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன், எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.