பல்லடத்தில் இளைஞா் திறன் பயிற்சி முகாம்
பல்லடத்தில் இளைஞா் திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


பல்லடத்தில் இளைஞா் திறன் பயிற்சிக்கு ஆள்களை தோ்வு செய்யும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற இயக்கம் சாா்பில் கிராமப்புற பகுதியைச் சாா்ந்த படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிட திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான இளைஞா்களை தோ்வு செய்யும் முகாம் பல்லடத்தில் நடைபெற்றது. இதில் 352 போ் கலந்து கொண்டனா். பல்வேறு திறன் பயிற்சிக்கு 173 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 257 பயனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் மதுமதி, உதவி திட்ட அலுவலா்கள் முத்து, லதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேஷ், பல்லடம் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தாமஸ் கிருஷ்டோபா், ஜெகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...