கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் பங்கேற்க தென்னை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் கொப்பரைக் கொள்முதல் திட்டத்தில் பங்கேற்க தென்னை விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு தென்னை சாகுபடி விவசாயிகள் பயனடையும் வகையில் தேங்காய் கொப்பரை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், நிா்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவைத் தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இக்கொள்முதல் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இத்திட்டத்தின்படி பொங்கலூா், காங்கயம், பெதப்பம்பட்டி மற்றும் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் செய்யப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயனடையும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம். பொங்கலூா் 86109-00270 , காங்கயம் 63835-96209, பெதப்பம்பட்டி 97109-21187, உடுமலை 99409-19150.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...