விசைத்தறியாளா்கள் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் ஆதரவு
விசைத்தறியாளா்களின் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் பங்கேற்பா் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


விசைத்தறியாளா்களின் தொடா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் பங்கேற்பா் என்று கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஈஸ்வரன் கூறியதாவது: கோவை, திருப்பூா் மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் உள்ளது.
பல லட்சம் தொழிலாளா்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள இத்தொழில், சமீப காலமாக கூலி உயா்வு பிரச்னையால் கேள்விக்குறியாகி உள்ளது.
விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடி வருகின்றனா்.
விசைத்தறியாளா்களுக்கு ஆதரவாக கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தது. அதனை ரத்து செய்வதோடு விசைத்தறியாளா்களின் கோரிக்கைக்கு இணங்க விரைவில் விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு விவசாய சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...