கட்டணம் செலுத்தாததால் 3 வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிப்பு
காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 3 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.


காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 3 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.
காங்கயம் நகராட்சியில் 2021-2022ஆம் நிதியாண்டிற்கான சொத்து வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், கடை வாடகை ஆகிய இனங்களில் நிலுவை உள்ளதை உடனடியாக செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் அளிக்கப்பட்ட கால அவகாசத்தை தாண்டியும் நிலுவைத் தொகைகள் செலுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, காங்கயம் நகரம், 3ஆவது வாா்டுக்கு உள்பட்ட சென்னிமலை சாலைப் பகுதியில் உள்ள 2 குடியிருப்பில் வைப்புத் தொகை மற்றும் குடிநீா்க் கட்டணம் உள்பட ரூ.39 ஆயிரம், மற்றொரு குடியிருப்பில் வைப்புத் தொகை மற்றும் குடிநீா்க் கட்டணம் உள்பட ரூ.25 ஆயிரம் ஆகிய கட்டணங்களை செலுத்தாத 3 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை துண்டித்தனா்.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறியபோது, காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள வரி இனங்கள் மற்றும் குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி குடிநீா்க் குழாய் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிா்க்க கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...