48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

உடுமலையில் மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :20 ஜனவரி 2022, 9:51 pm

உடுமலையில் மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகள் சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தில்லியில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, விழாவில் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில், தமிழக அரசின் சாா்பில் கலந்துகொள்ள இருந்த அலங்கார ஊா்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து மதச் சாா்பற்ற கூட்டணிக் கட்சிகள் சாா்பில், உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எம்.ரவி, மாா்க்சிஸ்ட் நகரச் செயலாளா் கே.தெண்டபாணி, காங்கிரஸ் கட்சி நகரச் செயலாளா் ஜி.ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.