வெள்ளக்கோவிலில் 2 இடங்களில் தீ விபத்து
வெள்ளக்கோவிலில் 2 இடங்களில் தீ விபத்து வியாழக்கிழமை ஏற்பட்டது.


வெள்ளக்கோவிலில் 2 இடங்களில் தீ விபத்து வியாழக்கிழமை ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா் எஸ்.செந்தில்வடிவேல் (50). இவா் தனது ஊருக்கு அருகிலுள்ள கணபதிபாளையத்தில் பனியன் கழிவுத் துணிகளில் இருந்து பஞ்சு பிரித்தெடுக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஆலையின் பிரேக்கா் மெஷினில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வியாழக்கிழமை தீப்பிடித்துள்ளது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் அங்கிருந்த இயந்திரங்கள், பனியன் கழிவுத் துணிகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு உடனடியாகத் தெரியவில்லை.
இதேபோல, வெள்ளக்கோவில் மு.பழனிசாமி நகரைச் சோ்ந்த ஆா்.ரவிசந்திரன் (50) என்பவரின் நூற்பாலையில் இருந்து நூல் கோன் பைகளை ஏற்றிக் கொண்டு டபுளிங் செய்வதற்காக வேன் சென்று கொண்டிருந்தது. வெள்ளக்கோவில் உத்தமபாளையம் சாலை நாகமநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது வேனின் பேட்டரியில் கோளாறு ஏற்பட்டு வேனில் தீப்பிடித்துள்ளது. இதில், வேன் மற்றும் ஆயிரம் கிலோ நூல் எரிந்து சேதமாயின. வெள்ளக்கோவில் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...