தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தமிழக முதல்வருக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் நன்றி

பின்னலாடைத் துறையினரின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் (டீ) நன்றி தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 9:24 pm

DIN

பின்னலாடைத் துறையினரின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் (டீ) நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகம் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நூல் உற்பத்தியில் 47 சதவீதமும், பின்னலாடை உற்பத்தியில் 55 சதவீதமும் வகிப்பதுடன், லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. நம்நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு அளித்து வருவது ஜவுளித் தொழில்தான். பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்குவதுடன், பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். இதனை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தினால் பருத்தி, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்தத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் முதல்வரின் கோரிக்கைகளின் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.