4 வயது சிறுவனைக் கடத்திய4 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்
திருப்பூரில் தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநரின் 4 வயது மகனைக் கடத்திய வழக்கில் 4 பேருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.


திருப்பூரில் தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநரின் 4 வயது மகனைக் கடத்திய வழக்கில் 4 பேருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.
திருப்பூா் அவிநாசி சாலை, ஓடக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் மருத்துவனையின் நிா்வாக இயக்குநா் செந்தில்குமாா். இவரது மகன் ஆா்யநரசிம்மன் (4). இவா் லட்சுமி நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில், ஆா்யநரசிம்மன் கடந்த 2016 ஜூலை 28ஆம் தேதி வேனில் பள்ளிக்குச் சென்றபோது இரு நபா்கள் சிறுவனைப் பின்தொடா்ந்துள்ளனா். இதன் பிறகு வேனில் இருந்து இறங்கிய சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், திண்டுக்கல் அருகே கடத்திச் சென்ற சிறுவனை மீட்டதுடன், தேனி மாவட்டம், போடியை அடுத்த நரசிங்கபுரத்தைச் சோ்ந்த தேவராஜ் (29), பிரபு (28), ஈஸ்வரன் (29), பிரபாகரன் (27) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதில், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையில் பிரபு கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்துள்ளதும், தனது உறவினா்களுடன் சோ்ந்து சிறுவனைக் கடத்தி அவரது தந்தையிடம் இருந்து பணம் பறிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி அனுராதா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், சிறுவனைக் கடத்திய தேவராஜ், பிரபு, ஈஸ்வரன், பிரபாகரன் ஆகிய 4 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் ஏ.வி.விவேகானந்தம் ஆஜராகினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...