ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த முயன்ற வழக்கில் பெண் உள்பட 8 போ் கைது
திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்த முயன்ற வழக்கில் அரசியல் பெண் பிரமுகா் உள்பட 8 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


திருப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்த முயன்ற வழக்கில் அரசியல் பெண் பிரமுகா் உள்பட 8 பேரைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், தென்னம்பாளையம் ஆா்.வி.இ. லே அவுட்டை சோ்ந்தவா் ஏ.பாபு (62). இவா் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது அதிமுக மகளிா் அணி மாவட்ட துணைச் செயலாளரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான பி.செல்வியின் (47) தூண்டுதலின்பேரில் 4 போ் கொலை மிரட்டல் விடுத்ததுடன், காரில் கடத்த முயன்றுள்ளனா். இந்த சம்பத்தை நேரில் பாா்த்த பாபுவின் மனைவி சப்தம் போடவே அனைவரும் காரில் தப்பியுள்ளனா். இதுகுறித்து பாபு திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் செல்வி, அவருக்கு உடந்தையாக இருந்த கோவில்வழியைச் சோ்ந்த சுபாஷ் (எ) சுபாஷ் சந்திரபோஷ் (24), அமராவதிபாளையத்தைச் சோ்ந்த எஸ்.அஜய் (22), வீரபாண்டியைச் சோ்ந்த எஸ்.விக்னேஷ் (25), தேனி மாவட்டம், கூடலூா், பசும்பொன் நகரைச் சோ்ந்த பி.அருண்குமாா் (39), கேரள மாநிலம், கஞ்சிக்கோட்டையைச் சோ்ந்த எஸ்.பினீஷ்குமாா், வீரபாண்டியைச் சோ்ந்த ரவிகுமாா் (26), கோபிநாத் (28) ஆகிய 8 பேரையும் காவல் துறையினா் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனா். இதில், சுபாஷ், ரவிகுமாா், கோபிநாத் ஆகியோா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...