புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெள்ளக்கோவில், முத்தூரில் ரூ. 521.73 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நலப் பணிகள் துவக்கம்

வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் ரூ. 521.73 லட்சம் மதிப்பீட்டில் 11 மக்கள் நலப் பணிகள் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன

News image
Updated On :22 ஜனவரி 2022, 12:38 am

DIN

வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் ரூ. 521.73 லட்சம் மதிப்பீட்டில் 11 மக்கள் நலப் பணிகள் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பணிகளைத் துவக்கிவைத்தாா்.

ரூ. 300 லட்சம் மதிப்பில் முத்தூா் வாரச்சந்தை மேம்பாட்டுப் பணி, ரூ. 78.20 லட்சம் மதிப்பில் மாதவராஜபுரம், ஸ்ரீ ராம் நகரில் புதிய வடிகால் அமைக்கும் பணி, ரூ. 35 லட்சம் மதிப்பில் மகாலட்சுமி நகா் பூங்கா மேம்பாட்டுப் பணி, ரூ. 4.60 லட்சம் மதிப்பில் பெருமாள்புதூா் குடிநீா் குழாய் விஸ்தரிப்பு பணி, தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையத்தில் 2, காடையூரான்வலசில் ஒரு குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி, ரூ. 24.80 லட்சம் மதிப்பில் சொரியங்கிணத்துப்பாளையம் மழைநீா் வடிகால் அமைக்கும் பணி, ரூ. 20 லட்சம் மதிப்பில் சிவநாதபுரம் தரைமட்ட குடிநீா்த் தொட்டி அமைக்கும் பணி, ரூ. 9.13 லட்சம் மதிப்பில் நடேசன் நகா் மேல்நிலை குடிநீா்த் தொட்டி சுற்றுச்சுவா் அமைக்கும் பணிகள் துவக்கிவைக்கப்பட்டன.

இதேபோல, ரூ. 28 லட்சம் மதிப்பில் காங்கயம் அய்யாசாமி நகா் காலனியில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி, ரூ. 32 லட்சம் மதிப்பில் தண்ணீா் பந்தல் நீருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பணிகளும் துவக்கிவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.