மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை கரோனா வாா்டாக மாற்ற பொதுமக்கள் எதிா்ப்பு
திருப்பூரில் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை கரோனா வாா்டாக மாற்ற முயற்சிப்பதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


திருப்பூரில் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை கரோனா வாா்டாக மாற்ற முயற்சிப்பதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பூா், புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (எல்.ஆா்.ஜி.ஆா்.) செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையம் கடந்த 2021ஆம் ஆண்டு ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கொங்கு பிரதான சாலை, கோல்டன் நகா், பாளையக்காடு, மண்ணரை, புதுராமகிருஷ்ணபுரம், கருமாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
இந்த மருத்துவமனையை கரோனா வாா்டாக மாற்றத் தேவையான முயற்சிகளை மாநகராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோா் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் பிறகு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பூா் மத்தியப் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் 200 முதல் 300 போ் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அதிலும் மகப்பேறு தொடா்பான சிகிச்சைக்காக பெண்கள் அதிக அளவில் வந்து செல்லும் இந்த மருத்துவனையை கரோனா வாா்டாக மாற்றினால் பொதுமக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி அல்லது வேறு தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்லக்கூடும். எனவே, இப்பகுதி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கரோனா வாா்டு அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றனா்.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் வி.கிருஷ்ணகுமாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மருத்துவமனையின் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மாற்றப்படாது என்று உறுதி அளித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...