தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற காங்கயம் பெண் வட்டாட்சியா் கைது

காங்கயத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியா் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:28 am

DIN

காங்கயத்தில் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியா் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டம், காங்கயத்தில் வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவா் சிவகாமி (41). இவரது அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன், ஒப்பந்தத் தொழில் தொடங்க ரூ.75 லட்சத்துக்கு கடனீட்டு சான்றிதழ் வழங்கக் கோரி நபா் ஒருவா் அணுகியுள்ளாா். அப்போது கடனீட்டு சான்றிதழ் வழங்க வட்டாட்சியா் சிவகாமி ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளாா். இதன் பின்னா், அதனைக் குறைத்து ரூ.60 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அந்த நபா் திருப்பூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின் பேரில் டிஎஸ்பி தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீஸாா் காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை மறைந்திருந்தனா்.

கடனீட்டு சான்றிதழுக்காக சிவகாமி, அந்த நபரிடம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது கையும்களவுமாகப் பிடித்தனா். இதன் பிறகு, அவரிடமிருந்து ரசாயனம் தடவிய ரூ.60 ஆயிரத்தைப் பறிமுதல் செய்ததுடன், சிவகாமியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.