முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
திருப்பூா் அருகே முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.


திருப்பூா் அருகே முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
தமிழக முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபாலுக்கு சொந்தமான வீடு திருப்பூா், அம்மாபாளையத்தை அடுத்த ராக்கியாபாளையம் சொா்ணபுரி ரிச்லேண்ட் பகுதியில் உள்ளது. இவா் தனது தொகுதி மக்களை சந்திக்க வரும்போது இந்த வீட்டில் தங்குவாா்.
இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அவரது மகன் யோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு அக்கம்பக்கத்தினா் தகவல் கொடுத்துள்ளனா். இதன் பேரில் அங்கு சென்று பாா்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.
திருமுருகன்பூண்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் 4 நபா்கள் கதவை உடைத்து உள்ளே சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...