எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு: பின்னலாடை ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜூலை 2022, 3:21 pm IST

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைந்துள்ளதால் ஏற்றுமதி, உள்நாட்டு ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

திருப்பூரில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த வேலை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த தொழில்களில் நேரடியாக 6 லட்சம் பேர், மறைமுகமாக 4 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சத்துக்கும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.70 வரையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, உயர்த்தப்ட்ட நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று நூற்பாலை சங்கங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுக்கு பின்னலாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாத விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் அனைத்து ரக நூல்களும் கிலோவுக்கு ரூ.40 குறைத்துள்ளதாக நூற்பாலை சங்கங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துக்கான ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்பது திருப்பூர் தொழில் அமைப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.