நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் தற்செயல் தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

News image
Updated On :12 ஜூலை 2022, 8:14 am

DIN

அவிநாசி: அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 16-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, 16-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான தற்செயல் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றதில் 78 சதவீதம் வாக்குகள் பதிவானது. 

இதையடுத்து, பதிவான 4, 283 வாக்குகள் எண்ணும் பணி அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சீனிவாசன்(திமுக)-2165, சுரேஷ் குமார்(சுயேச்சை)-1991 லட்சுமணன்(அமமுக)-72 வாக்குகளும் பெற்றனர். 55 வாக்குகள் செல்லாதவை. இதேபோல அவிநாசி அய்யம்பாளையம் ஊராட்சி 6 வார்டுக்கான  தற்செயல் தேர்தலில் துரைசாமி  வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.