தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வாகன விபத்து: இளைஞா் பலி

காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:45 pm

DIN

காங்கயம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

இது குறித்து காங்கயம் போலீஸாா் கூறியதாவது: காங்கயம் அருகே படியூா், தெற்குபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிராஜ் (26). கைப்பேசி கடை வைத்து தொழில் செய்து வந்துள்ளாா். இந்நிலையில், வழக்கம்போல கடையைப் பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் காங்கயம்-திருப்பூா் சாலை வழியாக தனது வீட்டுக்கு வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

காங்கயம் ஜெ.ஜெ.நகா் பகுதி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் சிராஜுன் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.

இதில், பலத்த காயமடைந்த சிராஜை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிராஜை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்.

இச்சம்பம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.