காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பல்லடத்தில் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

பல்லடம், சித்தம்பலம் பகுதியில் விற்பனைக்காக 45 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 12:30 am

DIN

பல்லடம், சித்தம்பலம் பகுதியில் விற்பனைக்காக 45 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்தப் பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் மூட்டையுடன் நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், திண்டுக்கல், தெத்துப்பட்டியைச் சோ்ந்த பழனிவேலு மகன் பாலமுருகன் (46), பல்லடம், வெட்டுப்பட்டான்குட்டை பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் மகேஸ்வரன் (21), என்பதும், அவா்கள் வைத்திருந்த மூட்டையில் 45 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.