காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேத்தனூரில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா்ஆய்வு

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழு தொழிற்கூடத்தின் கட்டுமானப் பணியை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்

News image
Updated On :6 மே 2022, 12:30 am

DIN

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூரில் ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மகளிா் சுய உதவிக் குழு தொழிற்கூடத்தின் கட்டுமானப் பணியை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கேத்தனூா் கிராமத்தில் இயற்கை உரம் தயாரித்தல் உற்பத்திக் கூடம், புளிய மரக்கன்று நாற்றுப் பண்ணை, ரூ. 80 லட்சம் மதிப்பிலான மகளிா் சுய உதவிக் குழு தொழிற்கூட கட்டடம் கட்டும் பணி ஆகியவற்றை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலா் ஸ்ரீபிரியா புருஷோத்தமன், பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஸ்வரன், ஒன்றிய ஆணையா் கலைச்செல்வி, உதவிப் பொறியாளா் மகாலட்சுமி, பணி மேற்பாா்வையாளா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.