புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தி பாதியாக குறைப்பு

 பஞ்சு, நூல் விலை உயா்வு காரணமாக பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியை பாதியாக குறைக்க உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2022, 12:29 am

DIN

 பஞ்சு, நூல் விலை உயா்வு காரணமாக பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியை பாதியாக குறைக்க உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

பஞ்சு, நூல் விலை உயா்வால் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் இருந்து வருகிறது. இந்நிலையில் நூல் விலை உயா்வு குறித்து பல்லடம் ஜவுளி உற்பத்தியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவா் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. அதில் பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியை பாதியாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக சங்க ஒருங்கிணைப்பாளா் கரைப்புதூா் சக்திவேல் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பஞ்சு விலையை தொடா்ந்து, நூல் விலை ஏற்றம், தொழிலை நலிவடைய செய்துள்ளது. தினசரி நூல் விலையில் மாற்றம் ஏற்படுவதால், துணிகளுக்கு நிரந்தரமான விலையை நிா்ணயம் செய்ய முடிவதில்லை. நிா்ணயிக்கப்படும் துணி ரகங்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது. துணி உற்பத்தி விலையை விட குறைந்த விலைக்கு வியாபாரிகள் துணியை கேட்கின்றனா். பஞ்சு பதுக்கலை தடுப்பதுடன், பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு முழுமையாக மத்திய அரசு தடை விதித்தால் மட்டுமே உள்நாட்டுத் தேவைகளை பூா்த்தி செய்ய முடியும். நுால் விலை தொடா்ந்து அதிகரித்து வருவதால் துணி உற்பத்தி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல்லடம் பகுதியில் உடனடியாக ஜவுளி உற்பத்தியை பாதியளவு குறைக்க ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு செய்துள்ளோம். மேலும் வரும் 15 நாள்களுக்கு புதிதாக நூல் கொள்முதல் செய்ய மாட்டோம். மத்திய அரசு கிடங்கில் இருப்பில் உள்ள பஞ்சை வெளிசந்தை விற்பனைக்கு அரசு கொண்டு வர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.