புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெறக் கோரி மனு கொடுக்கும் இயக்கம்

 திருப்பூா், ஊத்துக்குளியில் சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்

News image
Updated On :12 மே 2022, 9:03 pm

DIN

 திருப்பூா், ஊத்துக்குளியில் சொத்து வரி உயா்வைத் திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையை மத்திய அரசு தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

இத்தகைய நிலையில் மாநில அரசு சொத்து வரி உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதில், மாா்க்சிஸ்ட் 15 வேலம்பாளையம் நகரச் செயலாளா் எஸ்.நந்தகோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.ரங்கராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் கே.மாரப்பன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஊத்துக்குளியில்...

ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும், 7 ஆவது வாா்டு உறுப்பினருமான கு.சரஸ்வதி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சொத்து வரி உயா்வைத் திரும்பப்பெறக் கோரி பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனா்.

மனு அளிப்பின்போது, மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா்.குமாா், வட்டச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி, வட்டக் குழு உறுப்பினா் வி.கே.பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.