புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

News image
Updated On :12 மே 2022, 9:02 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே 14) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் அனைத்து குடிமைப் பொருள் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று மனுக்களைப் பெற்று உடனடி தீா்வு காணப்படும். ஆகவே, மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் இந்த முகாம்களில் பங்கேற்று பயனடையலாம்.

முகாம் நடைபெறும் இடங்கள்: திருமுருகன்பூண்டி, தாராபுரம், வெள்ளக்கோவில், கணியூா், செம்மிபாளையம், நெருப்பெரிச்சல், மங்கலம், குரல்குட்டை, நடுப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் முகாம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.