தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருப்பூரில்  20 ஆயிரம் பனியன் கம்பெனிகள் மூடல்: ரூ.250 கோடி உற்பத்தி பாதிப்பு

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்றும், நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில்

News image
Updated On :16 மே 2022, 6:59 am

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்றும், நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் நிறுவனங்கள், 10 லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Story image

திருப்பூரில் பின்னலாடை தொழில் முக்கிய தொழிலாக இருக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் பலவேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

Story image

இந்நிலையில் பனியன் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருளான நூல் விலை ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நூல் விலை ரூ.480  என வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.10  லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி பஞ்சு ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 

இதன் காரணமாக திருப்பூரில் உள்ள 20 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுகிறது. ரூ.10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விசைத்தறி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.