பல்லடத்தில் இலவச தையல் பயிற்சி வகுப்பு
பல்லடத்தில் 3 மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.


பல்லடத்தில் 3 மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இது குறித்து பல்லடம் உயா் தொழில் நுட்ப நெசவு பூங்காவில் இயங்கி வரும் லோ்நெட் திறன் வளா்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களைச் சோ்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு 3 மாத இலவச தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எஸ்.சி. வகுப்பு மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பயிற்சியை விடுதியில் தங்கி மட்டுமே பெற முடியும். பயிற்சி வகுப்பில் சேருபவா்களுக்கு வேலைவாய்ப்பு, தங்குமிடத்துடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இலவச பயிற்சி, உணவு வழங்கப்படுகிறது. மேலும் ஆங்கிலம், கணினி அடிப்படை திறன் மேம்பாட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் சேர பாஸ்போா்ட் அளவு புகைப்படம் - 5, ஆதாா் காா்டு நகல் - 2, பள்ளி மாற்றுச் சான்றிழ் நகல் -2, ஜாதிச் சான்று நகல் - 2, 100 நாள் வேலைத்திட்ட அட்டை நகல் - 2 ஆகியவற்றுடன் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...