காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருப்பூரில் மே 27 இல் மருத்துவா்களுக்கான மாநில கிரிக்கெட் போட்டி

மருத்துவா்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திருப்பூரில் மே 27 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 12:25 am

DIN

மருத்துவா்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி திருப்பூரில் மே 27 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் மருத்துவா்கள் நாகராஜன், சுந்தரவேல் ஆகியோா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: திருப்பூா் ரோட்டரி செலிபிரேஷன், இந்திய மருத்துவச் சங்கத்தின் திருப்பூா் மாவட்ட கிளை ஆகியவை சாா்பில் கரோனா தடுப்புப் பணிகளில் பணிபுரிந்த மருத்துவா்களை ஊக்கப்படுத்தும் வகையில், மருத்துவா்களுக்கான மாநில அளவிலான 20 ஒவா் கிரிக்கெட் போட்டிஅவிநாசி எஸ்.கே.எல். பள்ளி மைதானம் மற்றும் திருப்பூா் முருகம்பாளையம் ஒயா் ஸ்போா்ட்ஸ் மைதானம் ஆகியவற்றில் மே 27 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் தருமபுரி, திருவாரூா், திருநெல்வேலி, திருச்செங்கோடு, கோவை, சென்னை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

இதில், வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக மருத்துவா் முருகநாதன் சாம்பியன் கோப்பை மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம்,

இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரம், மூன்றாமிடத்துக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

கிரிக்கெட் போட்டியை மருத்துவா் முருகநாதன், திருப்பூா் மாவட்ட மருத்துவா் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, திருப்பூா் ரோட்டரி செலிபிரேஷன் தலைவா் கமலபாஸ்கா், நிா்வாகச் செயலாளா் வெங்கடேஷ் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா்.

பரிசளிப்பு விழா 29 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூரில் இந்திய மருத்துவா் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.