காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கேத்தனூா் அரசுப் பள்ளியில் என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளிகளில் பயிலும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவா்கள் 1025 போ் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவடைந்தது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:42 pm

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் 21 அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகரமைப்பு பள்ளிகள், 10 அரசு உதவிபெறும் பள்ளிகள், 10 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 41 பள்ளிகளில் பயிலும் என்.எஸ்.எஸ். திட்ட மாணவா்கள் 1025 போ் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவடைந்தது.

பல்லடம் அருகே உள்ள கேத்தனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் சித்ரா ஹரிகோபால் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சீராஜ் அகமது முன்னிலை வகித்தாா்.

இவ்விழாவில் என்.எஸ்.எஸ். மாவட்ட தொடா்பு அலுவலா் முருகேசன் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலா் பானுப்பிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.