தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெள்ளக்கோவிலில் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

வெள்ளக்கோவிலில் அரசின் வட்டார அளவிலான திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 6:42 pm

DIN

வெள்ளக்கோவிலில் அரசின் வட்டார அளவிலான திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா். வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், முத்தூா் பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களிடம் விவரம் கேட்டறியப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க அமைச்சா் அறிவுறுத்தினாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் 2,401 பணிகள் முடிவுற்றும், ரூ.9.26 கோடி மதிப்பீட்டில் 816 பணிகள் நடைபெற்றும் வருகின்றன. முத்தூா் பேரூராட்சியில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் 20 பணிகள் முடிவுற்றும், ரூ.6.32 கோடி மதிப்பீட்டில் 12 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தினாா்.

தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.