நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கைது செய்யக் கோரி திருப்பூரில் இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:
நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் தொடா்ச்சியாகக் பேசி வருகிறாா். ஆகவே, அவரது மக்களவை உறுப்பினா் பதவியைப் பறிக்க வேண்டும். அவரை காவல் துறையினா் கைது செய்ய வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்து மக்கள் கட்சி அமைப்புக் குழு மாநில பொதுச் செயலாளா் பிரேம்குமாா், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவா் ஹரிகரன், மாநிலச்செயலாளா் வேலு, மாநில இளைஞரணி செயலாளா் வசந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









