தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று   மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை:  ஜெ.ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று   மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச டேப்ளாய்ட் வழங்கினார். இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி கொண்டு வந்ததன் மூலம் ஏராளமான மாணவ,மாணவிகள் பயனடைந்துள்ளனர்.   தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். பொதுவெளியில் நடமாடும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.

கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. கேரள மாநிலத்திலும் தற்போது இல்லை என அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

மேலும் இது குறித்து தமிழகத்தில் அச்சப்பட வேண்டியதில்லை. கேரள மாநிலத்தில் ஷவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஷவர்மாவுக்கு தடை என்ற செய்தியிலும் உண்மை இல்லை. அதுபோன்ற தடை விதிக்கவில்லை. ஆனால் பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

6 ஆண்டுகளுக்கு பின்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரூ.340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி, மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்க பொதுப்பணித் துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முதலாமாண்டு மருத்துவ மாணவ மாணவியர்களிடம் பேசிய அவர், சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள் கல்வி பயின்று பணியாற்ற வேண்டும். சவாலான சூழ்நிலையில் கல்லூரியில் சேர்ந்துள்ள நீங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com