திருப்பூரில் 20 ஆயிரம் பனியன் கம்பெனிகள் மூடல்: ரூ.250 கோடி உற்பத்தி பாதிப்பு
By DIN | Published On : 16th May 2022 11:52 AM | Last Updated : 16th May 2022 12:29 PM | அ+அ அ- |

திருப்பூர்: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்றும், நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் நிறுவனங்கள், 10 லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் பின்னலாடை தொழில் முக்கிய தொழிலாக இருக்கிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இங்கு உற்பத்தியாகும் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கும், உள்நாட்டில் பலவேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் பனியன் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருளான நூல் விலை ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நூல் விலை ரூ.480 என வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் மத்திய அரசு நூல் மற்றும் பருத்தி பஞ்சு ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இதையும் படிக்க: மூன்றாவது நாளில் ஞானவாபி மசூதி அளவிடும் பணி: முக்கிய அம்சங்கள்
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள 20 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுகிறது. ரூ.10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விசைத்தறி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...