தமிழகத்தில் மகா சிவராத்திரி விழாக்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணத்தை அதிகாரிகள் செலவழிக்கக்கூடாது என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் 5 பெரு நகரங்களில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாட முடிவெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விழாவை நடத்துவதற்காகச் செல்லும் அமைச்சா்கள், அரசுத் துறை அதிகாரிகளுக்கு விமான பயணக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் நிா்வாகம் செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, மற்ற 4 கோயில்களுக்கும் எத்தனை வீணான செலவுகள் செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கோயில்களுக்கு பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகையை அநாவசியமாக செலவழிப்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் ஒரு வேளை பூஜைக்குக்கூட வழியில்லாமல் ஏராளமான கோயில்கள் பாழடைந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் இத்தகைய வீண் செலவுகள் தேவையா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
மேலும், மகா சிவராத்திரி விழாவுக்கு கோயில் நிதியைப் பயன்படுத்தாமல் அனாவசியச் செலவுகள் இல்லாமல் நன்கொடையாளா்கள் மூலமாக முறையான கணக்குகளுடன் செலவு செய்ய இந்து சமய அறநிலையத் துறை முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

வரலாறு படைக்க ஒன்றிணைவோம்: பிரதமர் மோடி டிவீட்

சிஎஸ்கே ரசிகர் ராஜ்பிரியன் விடியோவை பகிர்ந்த க்ருணால் பாண்டியா!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

