வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணி

வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டது. 
சாலைப் பணிகளைத் துவக்கி வைக்கிறார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.
சாலைப் பணிகளைத் துவக்கி வைக்கிறார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.

வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலை மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், வள்ளியிரச்சல் ஊராட்சி முத்தூர் வரட்டுக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மாநில செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை செய்து பணிகளைத் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். 

ஓலப்பாளையம் - மொட்டகாடு சாலை மற்றும் வரட்டுக்கரை - எல்லை செட் - மேட்டுக்காட்டுவலசு சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த இரண்டு சாலைகளையும் சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மேம்பாட்டுப் பணிகள் துவங்கப்பட்டு விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் உள்ளூர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com